மணிக்கட்டின் தொடர்ந்த பயன்பாட்டின் காரணமாக அந்தப் பகுதியில் இருக்கும் தசைநாண்கள் மற்றும் நரம்புகளில் பிசகு ஏற்பட்டு, மணிக்கட்டு வலி ஏற்படக்கூடும். விளையாடும் போது ஏற்படும் காயங்கள், விபத்துக் காயங்கள் மற்றும் மணிக்கட்டுக்கு வேலை தரக்கூடிய பணிகளை மேற்கொள்ளும் நபர்களுக்கு ‘ரிஸ்ட் ரேப் வித் தம்ப் லூப்’ மிகவும் பயனளிக்கக்கூடியது. மணிக்கட்டுக் காயங்கள் ஏற்படுவதற்கு எதிராக அல்லது காயத்தின் பின்னர் மணிக்கட்டுக்கு ஆதரவளிப்பதற்கு ஒரு சுமூகமான, கட்டுப்படுத்தப்பட்ட தடுப்பை வழங்குவதால் இது உகந்தது.