உலகத்தரமான ஒரு தயாரிப்பை சிறந்த விலையில் உங்களுக்கு வழங்குவதற்காக, ஜெர்மன் மிஷின்கள் மற்றும் மூலப் பொருட்களைப் பயன்படுத்தி சிலிகேர் சிலிக்கான் இன்சோல்கள் இந்தியாவில் உருவாக்கப்படுகின்றன. சந்தையில் விலை குறைவாகக் கிடைக்கப்பெறும் தயாரிப்புகள் தொழிற்துறை (உடலுக்கு இணக்கமாக இருக்காத) சிலிக்கான் மற்றும் (குறைந்த ஷாக் அப்சார்ப்ஷன் கொண்ட) ஜெல்களால் உருவாக்கப்பட்டவை. சிலிக்கான் என்பது மனிதனால் தயாரிக்கப்படும் ஒன்று. இது மணல் (சிலிக்கா) மற்றும் ஆக்ஸிஜன் கொண்டு தயாரிக்கப்படுகிறது. அதன் தூய்மைத்தன்மை காரணமாக, மருத்துவத் துறையில் மிகவும் விரும்பப்படும் ஒரு பொருள் ஆகும். மேலும் தீவிர அழுத்தங்கள் மற்றும் வெப்பநிலைகளை இது தாங்கிக்கொள்ளும் திறன் கொண்டுள்ளது.
சிலிக்கான் இன்சோலை பயன்படுத்துவதன் நோக்கம்
நாம் நடக்கும்போது, ஒவ்வொரு அடியிலும் பாதத்தின் குதிகால் பகுதியும், பந்துப் பகுதியும் பூமியின் மீது பதிகின்றன. இது குதிகாலின் மூலமாக முழங்கால் மற்றும் இடுப்பு மற்றும் முதுகுப் பகுதிக்கு ஓர் அதிர்வைப் பரிமாற்றும். காலப்போக்கில், இது குதிகால் வலி, முழங்கால் வலி மற்றும் முதுகு வலி ஏற்படக் காரணமாகலாம். குதிகால் பந்தில் ஏற்படும் வலி கூட, எலும்பில் ஏற்படும் அசாதாரணங்கள், தட்டையான பாதம் மற்றும் கால்விரல்களில் ஏற்படும் வளைவுகள் போன்றவற்றின் காரணமாக ஏற்படுகின்றது. இயல்பாக அமைந்த பாதங்கள், நடக்கும் போது ஏற்படும் அதிர்வைத் தடுக்கும். ஆனால் வயதாகும் போது, இந்த கொழுப்புத் திட்டுகள் தேய்ந்து போய் (அதாவது மெலிந்து போய்), உடலின் மேல்ப்பகுதியில் அதிர்வுகள் கடத்தப்படுவதை முழுமையாகக் கட்டுப்படுத்தாமல் போய்விடும். சிலிக்கான் இன்சோலை அணிந்துகொள்வதால், குதிகால் மற்றும் கணுக்கால் பகுதியில் ஏற்படும் அதிர்வுகள் உறிஞ்சப்படும். மேலும் இது பாதத்தில் வளைவைப் பராமரிப்பதற்கும் உதவும்.