இதயமானது இதயத் தமனிகள் மூலம் கீழே கால்களுக்கு இரத்தத்தை செலுத்துகிறது. ஆக்சிஜன் நீக்கப்பட்ட இந்த இரத்தமானது கால்களில் உள்ள இரத்த நாளங்கள் மூலம் மீண்டும் இதயத்திற்கு செலுத்தப்படவேண்டும். இயல்பான உடல்நிலையுடன் இருக்கும் ஓர் ஆரோக்கியமான நபரில், அவரின் பின்னங்கால் தசையானது இந்த நோக்கத்திற்காக ஒரு பம்ப் போல செயல்படும். பின்னங்கால் தசையின் பம்பிங் விளைவைத் தவிர, ஈர்ப்பு விசை காரணமாக கீழே இரத்த ஓட்டம் சென்று விடாமல் இருப்பதை உறுதி செய்து, உடலின் மேல்ப்பகுதிக்கு இரத்த ஓட்டத்தை செலுத்துவதற்காக, மேல்நோக்கித் திறக்கும் வால்வுகள் கால்களில் இருக்கும் இரத்த நாளங்களில் உள்ளன. ஒருவேளை இந்த வால்வுகள் பலவீனமாக இருந்தால், கால்களில் இருக்கும் இரத்த நாளங்களில் இரத்தம் சேர்ந்து வெரிகோஸ் வெய்ன் ஏற்படும்.
வெரிகோஸ் வெய்ன் ஸ்டாக்கிங்ஸ் எவ்வாறு உதவுகின்றன?
வெரிகோஸ் வெய்ன் ஸ்டாக்கிங்ஸ், கால்களுக்கு ஒரு கட்டுப்படுத்தப்பட்ட அழுத்தத்தைக் கொடுத்து கால்களில் இருக்கும் இரத்த நாளங்களை சுருக்கி அதன்மூலம் (வால்வுகளை முறையாக மூட உதவி) இதயத்திற்கு இயல்பான இரத்த ஓட்டம் செல்வதை உறுதி செய்கிறது. வெரிகோஸ் வெய்ன் ஸ்டாக்கிங்ஸ் கணுக்காலில் உள்ள இரத்த நாளங்களின் மீது அதிகபட்ச அழுத்தத்தை அளித்து, அப்படியே படிப்படியாக முழங்கால் மற்றும் தொடைப்பகுதிகளில் செல்லும்போது குறைந்த அழுத்தத்தை வழங்குகிறது. ஒரு வெரிகோஸ் வெய்ன் ஸ்டாக்கிங் கணுக்கால் பகுதியில் 100% அழுத்தத்தையும், பின்னங்காலில் 70% மற்றும் தொடைப்பகுதியில் 40% என்று படிப்படியான அழுத்தத்தை வழங்குகிறது. இதன் விளைவாக, ஒரு திரவம் அதிக அழுத்தம் கொண்ட பகுதியில் இருந்து குறைந்த அழுத்தம் கொண்ட பகுதிக்குப் பாயும் என்ற கோட்பாட்டின்படி, இரத்த நாளங்கள் சேதமடைந்திருந்தாலும் கூட அழுத்தத்தால் உந்தப்பட்டு இரத்தம் இயல்பான வகையில் செலுத்தப்படுகிறது.