போஸ்ட் மெட்டேர்னிட்டி கோர்ஸெட்டை நான் எதற்காக பயன்படுத்தவேண்டும்?
கர்ப்பகாலத்தின்போது, கர்ப்பப்பை விரிவாக்கம் காரணமாக அடிவயிற்றில் உள்ள தசைகள் விரிவடைகின்றன. வளரும் சிசுவுக்கு இடமளிப்பதற்காக இடுப்புப்பகுதியும் விரிவடையும். குழந்தை பிறந்தபின்னர், கர்ப்பப்பையானது அதன் கர்ப்பத்துக்கு முந்தைய நிலைமையை அடைவதற்கு 6 வாரங்கள் எடுக்கிறது. குழந்தை பிறந்த பின்னர் அடிவயிற்றின் சுவர்களும் தளர்ந்து போகின்றன. போஸ்ட் மெட்டேர்னிட்டி கோர்ஸெட் ஆனது, தாய் தனது கர்ப்பகாலத்துக்கு முந்தைய நிலைமையை அடையும் செயல்முறையை துரிதப்படுத்துவதற்கு உதவும் அதிகப்படியான சப்போர்ட்டையும் அழுத்தத்தையும் அளிக்கிறது.
ஒரு சிசேரியன் அறுவைசிகிச்சையின் பின்னரும் கூட, போஸ்ட் மெட்டேர்னிட்டி கோர்ஸெட்டை அணிந்துகொள்வது என்பது பரிந்துரைக்கப்படுகிறது. இந்தச் சூழலின்போது, அறுவைசிகிச்சை செய்யப்பட்ட இடத்திற்கு கோர்ஸெட் கூடுதல் சப்போர்ட்டையும், அழுத்தத்தையும் அளிக்கும். இதனால் அந்தப் பகுதிக்கு இரத்தஓட்டம் அதிகமாகி அறுவைசிகிச்சையால் ஏற்படும் புண்ணானது விரைவாக ஆறிவிடும். இதே காரணங்களுக்காக, வயிறு குறைப்பு அறுவைசிகிச்சை (அப்டாமினோபிளாஸ்டி), கருப்பை நீக்க சிகிச்சை (ஹிஸ்டரக்டமி), கொழுப்பு உறிஞ்சல் சிகிச்சை (லிப்போஸக்ஷன்) மற்றும் உடல் எடை குறைப்பு அறுவைசிகிச்சை போன்ற அடிவயிற்றில் மேற்கொள்ளப்படும் அறுவைசிகிச்சைகளிலும் இத்தகைய கோர்ஸெட் பயனுள்ளதாக இருக்கும்.