டைனா சர்ஜிகல் டிரஸை எவ்வாறு அணியவேண்டும்
மல்லாந்து படுத்துக்கொண்டு ஹெர்னியா வீக்கம் அடிவயிற்றின் உள்ளே செல்லும் வரை மென்மையாக உங்கள் விரல்களால் மசாஜ் செய்து கொடுக்கவும்.
அட்ஜஸ்ட் செய்யத்தக்க வகையிலான சர்ஜிகல் டிரஸை வீக்கம் இருந்த இடத்தில் உங்கள் அடிவயிற்றின் கீழே வைக்கவும். ஹெர்னியா இல்லாத பக்கத்தில் உள்ள கம்ப்ரெஷன் பேடை வேண்டுமென்றால் அகற்றிவிடலாம். ஒரு பக்கம் மட்டும் ஹெர்னியா இருந்தாலும் இரண்டு பேட்களையும் பயன்படுத்துமாறு சில மருத்துவர்கள் பரிந்துரைப்பதுண்டு. இரண்டு பேட்களையும் அணிவது என்பது சமமான அழுத்தத்தை வழங்கி, அழுத்தம் கொடுக்கப்படாத பகுதியில் அதிக சுமை ஏற்படுவதை தடுக்கும்.
மல்லாந்து படுத்தவாறே, எலாஸ்டிக் இடுப்பு பெல்ட்டை உங்கள் உடலின் பின்புறமாக தள்ளி, பெல்ட்டின் வலது முனையில் இருக்கும் வெல்க்ரோ ஸ்ட்ராப்பை பொருத்தவும்.
மல்லாந்து படுத்தவாறே, எலாஸ்டிக் ஸ்ட்ராப்களை உங்கள் கால்களைச் சுற்றி இழுத்து இடுப்பு பெல்ட்டில் உள்ள பக்கிள்களை மாட்டவும்.
எழுந்து நின்றுகொண்டு, பேட்களுடன் கூடிய சர்ஜிகல் டிரஸ் உங்கள் உடலில் ஹெர்னியா உள்ள பகுதியில் நேரடியாகப் பொருந்தி வசதியான வகையில் இருப்பதை உறுதி செய்துகொள்ளவும்.
டைனா சர்ஜிகல் டிரஸை எவ்வாறு அகற்றவேண்டும்
எலாஸ்டிக் லெக் ஸ்ட்ராப்களில் ஒன்றை கழற்றிவிட்டு மற்றொன்றையும் கழற்றவும்.
இடுப்பு பெல்ட்டில் உள்ள ஹூக்குகளை கழற்றி, உடலில் இருந்து டிரஸை மெதுவாக அகற்றவும்.
துவைப்பதற்கான வழிமுறைகள்
துவைப்பதன் முன்னர் கம்ப்ரஷன் பேட்களை அகற்றி அவற்றை சுத்தமான துணியால் துடைக்கவும். மென்மையான சோப் கொண்டு வெதுவெதுப்பான தண்ணீரில் தயாரிப்பை துவைக்கவும். பிழியவோ கசக்கவோ கூடாது. சூரியஒளி அல்லது வெப்பம் படாத இடத்தில் அறை வெப்பநிலையில் காற்றில் உலர்த்தவும். டிரை கிளீன் செய்யவோ அல்லது அயர்ன் செய்யவோ கூடாது.