ஆன்டி-எம்பாலிசம் ஸ்டாக்கிங்ஸ் அறுவை சிகிச்சையின்போதும், அறுவை சிகிச்சையின் பின்னர் உடனடியாகவும் DVT ஏற்படுவதற்கான வாய்ப்புகளை குறைப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது.
பொது விவரங்கள்
DVT என்றால் என்ன?
DVT என்பதற்கு டீப் வெய்ன் த்ராம்போசிஸ் (ஆழ்ந்த இரத்த நாள உறைவு) என்று பொருள். ஆழ்ந்த இரத்த நாளங்கள் என்பவை சருமத்தில் மேலோட்டமாக காணப்படும் இரத்த நாளங்களுக்கு எதிர்ப்புறம் ஆழ்ந்து உள்ளார்ந்து காணப்படும் இரத்த நாளங்கள் ஆகும். த்ராம்பஸ் என்பது இரத்ததில் ஏற்படும் ஓர் உறைவு. ஓர் இரத்த உறைவு ஏற்பட்டால், அது இரத்த நாளங்கள் வழியே பயணித்து நுரையீரல்களை அடையும். இது ஓர் அபாயகரமான நுரையீரல் இரத்தக்குழாய் அடைப்பினை ஏற்படுத்தக்கூடும். இரத்தம் தேக்கநிலையில் இருக்கும்போது இரத்த உறைவு ஏற்பட வாய்ப்புள்ளது. இது நோயாளிகள் இயங்காமல் இருக்கும் நீண்ட நேர அறுவை சிகிச்சைகளில் (30 நிமிடத்துக்கும் கூடுதலான) ஏற்படுகிறது.
ஆன்டி-எம்பாலிசம் ஸ்டாக்கிங்ஸ் எவ்வாறு உதவுகின்றன?
ஆன்டி-எம்பாலிசம் ஸ்டாக்கிங்ஸ் ஒரு இயந்திரத்தன்மை கொண்ட பம்பிங் செயல்பாட்டை வழங்கி, இரத்தத்தை இரத்த நாளங்கள் வழியே தள்ளுவதற்கு உதவுகிறது. இது இரத்த உறைவு ஏற்படுவதற்கான சாத்தியத்தைக் குறைக்கும்.
தொழில்நுட்ப விவரங்கள்
DVT-18 ஆன்டி-எம்பாலிசம் ஸ்டாக்கிங்ஸை ஏன் பயன்படுத்தவேண்டும்?
இன்று இந்தியாவில் விற்பனையாகும் AE ஸ்டாக்கிங்குகளிலேயே அதிகம் விற்பனை செய்யப்படும் ஸ்டாக்கிங்ஸ் DVT-18 ஆன்டி-எம்பாலிசம் ஸ்டாக்கிங்ஸ் ஆகும். அவை ஐரோப்பிய இயந்திரங்கள் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட இழைகள் கொண்டு ஐரோப்பிய தரநிலைகளுக்கு சமமாக தயாரிக்கப்படுகின்றன. DVT-18 ஆன்டி-எம்பாலிசம் ஸ்டாக்கிங்ஸ் துல்லியமான மற்றும் படிப்படியான அழுத்தத்தை உறுதி செய்கிறது.
மாறுபாடுகள்
கிடைக்கப்பெறும் ஸ்டைல்கள்: AD (முழங்காலுக்கு கீழே), AG (முழங்காலுக்கு மேலே)